SuperTopAds

உள்ளூராட்சி சபைகளை கலைக்காமல் தேர்தல் அறிவிப்பு! அரச சொத்துக்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் நடவடிக்கை தாராளம்...

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி சபைகளை கலைக்காமல் தேர்தல் அறிவிப்பு! அரச சொத்துக்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் நடவடிக்கை தாராளம்...

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் வளங்களை பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். 

நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெறும்போது சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவது வழமை.

இம்முறை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாத நிலையில் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தவிசாளர்களாக இருப்பவர்கள் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச வாகனங்களை பயன்படுத்துகிறார்கள்.

அது மட்டுமல்லாது தவிசாளருக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்களும் அரச வாகனங்களை தமது தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களை இத்தகைய செயற்பாடானது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

அரசாங்கம் தேர்தலை நடத்துவதில்லை என முன்கூட்டியே தீர்மானித்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை கலைக்காமல் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதாக சந்தேகங்கள் இருக்கிறது. 

ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி மொட்டுக் காட்சி என்பன உள்ளூரா ட்சி மன்றத் தேர்தல் இடம் பெற்றால் மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற நிலைமையை அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது தற்போது இருக்கும் உள்ளூராட்சிசபைகளில் பெரும்பாலானவை மொட்டு கட்சி ஆதரவாளர்கள் அங்கம் வகிக்கின்ற சபையாக காணப்படுகின்ற நிலையில் அதனை கலைக்கவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை வர்த்தமானி மூலம் தேர்தலுக்கான திகதி உறுதிப்படுத்தவில்லை.