பிரிட்டன் சுற்றுலா பயணியான பெண்ணுக்கு நடந்த சம்பவம்! 83 லட்சத்தை இழந்தார், பொலிஸார் தீவிர விசாரணை...
பிரிட்டன் நாட்டு சுற்றுலா பயணியான பெண் ஒருவர் கொள்வனவு செய்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாட்டையடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற பெண் இந்த முறைப்பாட்டை நேற்று இரவு செய்துள்ளார்.
முறைப்பாட்டாளரான பிரித்தானிய பெண் சுற்றுலா விடுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் அளுத்கம பிரதேசத்திற்கு சென்று பிரதான நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்துள்ளார்.
பிரித்தானிய பெண் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிக்காட்டிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொள்ளையிடப்பட்டுள்ள தங்க ஆபரணங்களின் இலங்கை ரூபா பெறுமதி 83 லட்சம் ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.