“கல்விக்கு கைகொடுப்போம்” தென்மராட்சியில் உதவி வழங்கல் மற்றும் சேவையாளர் கௌரவிப்பு..
கல்விக்கு கை கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், சேவையாளர் கெளரவிப்பும்
உயர்தர மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கும் நிகழ்வும் யாழ்.தென்மராட்சி அறவழி போராட்ட குழுவின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் அதிபர். செ.பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்தி மேம்பாட்டாளருக்கான விருது க.நடராஜா,
வாழ்நாள் சமூக வேவையாளருக்கான விருது வி.எஸ்.துரைராசா, பல்கலை வித்தகர் கலைஞருக்கான விருது வி.திவ்வியராஜனுக்கும் வழங்கி வைப்பு. மேலும் பல்கலைக்கழக புகு மாணவர்கள் 20 பேருக்கு விருதும்
தலா 5 ஆயிரம் ரூபாய் பணமும், க.பொ.த உயர்தர 50 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி வைப்பு.இந்த நிகழ்வில் தென்மராட்சி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் இராஜதுரை அபிராமி பிரதம விருந்தினராகவும்,
தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் நிறுவுநர் இணைப்பாளர் இரா.சத்தியசீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.