SuperTopAds

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்திய மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்திய மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டிருக்கின்றது. 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளருக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கும் ஜனவரி 31ஆம் திகதி  மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமான கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு காயம் ஏற்படுத்தியமை 

ஆகிய குற்றச்சாட்டை பொலிஸார் முன் வைத்துள்ளனர்.