பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜமுனா காலமானார்

ஆசிரியர் - Editor II
பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜமுனா காலமானார்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களில் நடித்த பிரபல மூத்த திரைப்பட நடிகை ஜமுனா தனது 86வது வயதில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே, பொம்மை கல்யாணம், தெனாலி ராமன் உள்ளிட்ட 25க்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்து ஜமுனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கர்நாடக மாநிலத்தில் 1936ஆம் ஆண்டு நிப்பானி ஸ்ரீனிவாச ராவ் - கவுசல்யா தம்பதிக்கு மகளாக ஜமுனா பிறந்தார்.

தன்னுடைய 16வது வயதில் திரையுலகில் அறிமுகமாகி முனனணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜமுனா இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு