திருமணமாகி சில நாட்களேயான நிலையில் நண்பருடன் சேர்ந்து பியர் குடித்த கணவனின் காதை கடித்து குதறிய மனைவி! இலங்கையில் நடந்த தரமான சம்பவம்...
திருமணமாகி சில நாட்களில் நண்பருடன் சேர்ந்து பியர் குடித்துவிட்டு 30 நிமிடம் தாமதமாக வீட்டுக்குவந்த கணவனின் காதை கடித்து குதறிய மனைவி, கணவரின் உடல் முழுவதும் நகங்களால் கீறி காயப்படுத்திவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
கம்பளை - கலஹாவில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மணமகனும், மணமகளும் ஏழு வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அன்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நான்கு நாட்களை தேனிலவில் கழித்த இருவரும் கலஹாவில் உள்ள மணமகன் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அங்கு மணமகன் தனது நண்பரை சந்தித்து இருவரும் பீர் குடித்துள்ளனர்.
இதனால் மணமகன் வீட்டிற்குள் வர அரை மணி நேரம் தாமதமாகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த மனைவி கணவனை திட்டி, அடித்தும், இரத்தம் வழியும் வரை காதை கடித்தும், நகத்தால் உடலை கீறியும் உள்ளார்.
இதன்பேது அவரை தடுக்க குறுக்கிட்ட கணவனின் தாய், தந்தையையும் திட்டிய மனைவி சகோதரியையும் தாக்கிவிட்டு எழுத்து மோதிரத்தை கழற்றி வீசிவிட்டு இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மணமகனைத் தாக்கிய மணமகள், மணமகனின் உடலைக் கீறி காயப்படுத்தியதாகவும், மணமகனின் சகோதரியையும் காயப்படுத்தியதாகவும், அத்தை மற்றும் மாமாவை திட்டிவிட்டு மணமகளின் திருமண மோதிரத்தை கழற்றி வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.