SuperTopAds

சாரதியின் கவனயீனத்தால் பேருந்திலிருந்து தவறி விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
சாரதியின் கவனயீனத்தால் பேருந்திலிருந்து தவறி விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..

பேருந்து ஓட்டுனரின் கவனயீனத்தால் 6 வயது சிறுமி பேருந்து சக்கரத்திற்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரசங்கஸ்வெவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் முன்பக்க கதவில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோது கீழே விழுந்து 

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம, தாருசலம் முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் கம்பிரிஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமியே  உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.