யாழ்.பல்கலைகழக மாணவனின் தொலைபேசியில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள்! நண்பர்களுக்கு பகிர்ந்தும் கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவனின் தொலைபேசியில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள்! நண்பர்களுக்கு பகிர்ந்தும் கண்டுபிடிப்பு..

தொலைபேசியல் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்ததுடன், அதனை நண்பர்களுக்கு பகிர்ந்த யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக விடுதியின் முன்பாக நின்ற இருவரை 

பிடித்து அவர்களின் கைபேசிகளை பரிசோதித்தனர். இதன போது ஒருவர் பெண் ஒருவரின் அந்தரங்கப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தமை கண்டறியப்பட்டது. பொலிஸாரின் விசாரணையில் அது அவரின் முன்னாள் காதலி என்றும் 

இணையவழி உரையாடலின்போது காதலியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாகவும் காதல் உறவு முறிந்ததும் அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் எனவும் தெரியவந்தது. இ

தையடுத்து கைதானவரின் தொலைபேசியிலிருந்த அந்தரங்க புகைப்படங்களை அழிக்க செய்த பொலிஸார், சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு