கண்டம் தாண்டி ஒலித்த தளபதி விஜய்யின் புகழ்!!

ஆசிரியர் - Editor II
கண்டம் தாண்டி ஒலித்த தளபதி விஜய்யின் புகழ்!!

கனடாவில் தளபதி விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு வெளியிட்ட வீடியோவில், கனடாவில் செயல்படும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகப் பணிகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும் என கூறினார்.

மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செய்துவரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூகல நலப்பணிகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோவை தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு