கொழும்பு - கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை போராளியின் சகாவுக்கு மரண தண்டணை!

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடந்த 2004ம் அண்டு இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பெண் தற்கொலை போராளியின் சகாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டணை மரண தண்டணையாக மாற்றப்பட்டிருக்கின்றது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சத்தியா என அழைக்கப்படும் செல்வக்குமார் சத்தியசீலா என்ற பெண் தற்கொலைகுண்டுதாரியின் சகாவை உடனடியாக கைதுசெய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தண்டனைகளை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




