யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் அம்புலன்ஸ் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் அம்புலன்ஸ் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முயன்ற சிறுமி மீது அம்புலன்ஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்புலன்ஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.