காணி விடுவிப்பு தொடர்பாக உயர்மட்ட பேச்சு! ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய மாவட்டச் செயலர், அதை சொல்ல கூடாதாம்..

ஆசிரியர் - Editor I
காணி விடுவிப்பு தொடர்பாக உயர்மட்ட பேச்சு! ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய மாவட்டச் செயலர், அதை சொல்ல கூடாதாம்..

ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் - யாழ்.மாவட்டச் செயலர் உள்ளிட்ட மாவட்டச் செயலக அதிகாரிகளுக்குமிடையில் யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்க யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மறுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகைதந்த உயர் அதிகாரிகளுடன் யாழ்.மாவட்டத்திலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

கலந்துரையாடல் முடிவுற்றதும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலில் காணி விடுவிப்புத் தொடர்பில் ஏதும் பேசப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர் எனினும் அதற்கு பதில் அளிக்க மாவட்டச் செயலர் மறுத்ததுடன்,

 ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரியின் பெயரைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு தடுமாறினார். பின்னர் மலுப்பல் பேச்சுடன் வனவிலங்கு காணி தொடர்பில் ஆராய்வதற்காக வந்தனர். 

ஆராய்ந்தபின் முடிவு எட்டப்படலாம் என கூறிச் சென்றார். அண்மையில் தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கபடும் 

என்ற உத்தரவாதத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு