ஐ.சி.சியின் சிறந்த ரி-20 அணியில் ஹஸரங்க

ஆசிரியர் - Editor II
ஐ.சி.சியின் சிறந்த ரி-20 அணியில் ஹஸரங்க

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி-20 அணியில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துள்ளார்.

ஐ.சி.சி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பிரகாசித்துவரும் வீரர்களை கண்டறிந்து, வருடத்தின் சிறந்த அணியொன்றை பெயரிட்டு வருகின்றது.

இந்தநிலையில் இம்முறை வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சியின் சிறந்த ரி-20 அணியில் இலங்கை கிரிக்கெட் ரி-20 அணியின் உப தலைவர் வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு 19 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமாத்திரமின்றி இலங்கை அணி ஆசியக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த இவர், 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார். அவர் 2021ஆம் ஆண்டும் ஐ.சி.சியின் சிறந்த ரி-20 அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஐ.சி.சியின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி-20 அணியின் விபரங்கள் வருமாறு;-

ஜோஸ் பட்லர் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், கிளேன் பிலிப்ஸ், சிக்கண்டர் ரஷா, ஹர்திக் பாண்டியா, செம் கரன், வனிந்து ஹஸரங்க, ஹரிஸ் ரவூப், ஜோஸ் லிட்ல்

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு