வெறித்தனம் காட்டும் வாரிசு!! -11 நாட்களில் 250 கோடி வசூல்-

ஆசிரியர் - Editor II
வெறித்தனம் காட்டும் வாரிசு!! -11 நாட்களில் 250 கோடி வசூல்-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' இப்படம் கடந்த 11 நாட்களில் பெற்ற வசூல் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11 ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு