திடீரென இடிந்து விழுந்த 5 மாடிக்கட்டடம்!! -சிரியாவில் 16 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
திடீரென இடிந்து விழுந்த 5 மாடிக்கட்டடம்!! -சிரியாவில் 16 பேர் பலி-

அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போ நகரத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. 

இதில் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 16 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். 

இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு பலியானவர்கள் உடல்களை மீட்டனர். 

காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுப்பி வைத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

கட்டடத்தின் அடிப்பகுதி நீர்கசிவு காரணமாக பலவீனமாக இருந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு