க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மரண தண்டணை கைதி! யாழ்.சிறையில் உள்ள கைதி ஒருவரும் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகிறார்..

மரண தண்டணை கைதி ஒருவர் நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலை திணைக்களம் தொிவித்துள்ளது.
குறித்த கைதி சிறைவாசத்தின் போது "அனுஷய ஆசவ" என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார்.




