யாழ்.மாவட்ட மெய்வல்லுநர் சங்க புதிய தலைவராக மீண்டும் இளம்பிறையன் தெரிவு

ஆசிரியர் - Editor II
யாழ்.மாவட்ட மெய்வல்லுநர் சங்க புதிய தலைவராக மீண்டும் இளம்பிறையன் தெரிவு

யாழ்.மாவட்ட மெய்வல்லுநர் சங்க பொதுக்கூட்டத்தில் 2023 - 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவில் தலைவராக யாழ்.பல்கலைக்கழக  உடற்கல்வி அலகின் விரிவுரையாளர் எம்.இளம்பிறையனும், செயலாளராக யாழ்.மாவட்ட செயலக விளையாட்டு அதிகாரி கே.விஜிதரனும், பொருளாளராக வடமாகாண விளையாட்டு திணைக்கள சிரேஷ்ட விளையாட்டு அலுவலர் எஸ்.சதீஷ்குமாரும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக யாழ்.மாவட்ட மெய்வல்லுநர் சங்க தலைவராக சிறப்பாக கடமையாற்றிய இளம்பிறையன் சிறிது கால இடைவெளியி‌ன் பின் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் யாழ்.மாவட்ட மெய்வல்லுநர் தொழில் நுட்ப அலுவலர்கள் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு