பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது பணியாளர்கள் தாக்குதல்! பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்..

பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (22) ஆடைகள் விற்பனை நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளர் மீது வணிக வாளாக ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.




