வாரிசு படம் வெற்றி!! -கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு-

ஆசிரியர் - Editor II
வாரிசு படம் வெற்றி!! -கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு-

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் 150 கோடியும், 7 நாட்களில் 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. 

தொடர்ந்தும் வாரிசு படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'வாரிசு' படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில் தளபதி விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில்,விஜய்யுடன், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு