கே.எல்.ராகுலுக்கு நடிகையுடன் நாளை திருமணம்!!

ஆசிரியர் - Editor II
கே.எல்.ராகுலுக்கு நடிகையுடன் நாளை திருமணம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட வீரர்களில் ஒருவரான லோகேஷ் ராகுல் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வந்தார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ராகுல் ஆடவில்லை. சொந்த காரணங்களுக்காக அவர் விலகி இருந்தார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகி உள்ளன. 

மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடந்தது. மலைவாசஸ்தலமான மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு