SuperTopAds

கல்விச் சுற்றுலாக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! மிக விரைவில் சுற்றறிக்கை வெளியாகிறது..

ஆசிரியர் - Editor I
கல்விச் சுற்றுலாக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! மிக விரைவில் சுற்றறிக்கை வெளியாகிறது..

பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

இதன்படி ஒருநாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோ மீட்டராக மட்டுப்படுத்தப்படத்துவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். 

கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6 மணிக்கு முன் அந்தந்த பாடசாலைக்குக்கு அழைத்து வர வேண்டும். 

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மேற்கொள்ளும் கல்விப் பயணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.

புதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

Radio