முச்சக்கர வண்டி மீது புகைரதம் மோதி விபத்து! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்..

புகைரத பாதைக்குள் நுழைந்த முச்சக்கர வண்டி மீது புகைரதம் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றள்ளது. மாத்தறை வெலிகமவில் காலு குமாரி எக்ஸ்பிரஸ் ரயிலே
முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.




