காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர்!! -அபராதம் விதித்தது பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர்!! -அபராதம் விதித்தது பொலிஸ்-

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். 

அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக போலீசார் டுவிட்டரில் கூறும்போது, ஓடும் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு