மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் கட்சி அம்பாறையில் வேட்புமனு தாக்கல்
எமது கன்னி தேர்தலில் மக்களின் தெரிவின்படி பெற்ற வேட்பாளர்களை வைத்து இந்த போட்டியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம் என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் கட்சி அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று (21)சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் உட்பட நாடு பூராகவும் உள்ள ஏனைய உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுகளை ஐக்கிய காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்பாறை கச்சேரியில் நேற்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வரும் போது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொட்டும் மழையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது
நாம் நாட்டில் உள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளிலே நாங்கள் போட்டியிடுகின்றோம்.எமது கன்னி தேர்தலில் மக்களின் தெரிவின்படி பெற்ற வேட்பாளர்களை வைத்து இந்த போட்டியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம்.
நிச்சயமாக ஜனநாயகம் முறைப்படி மக்கள் எமக்குரிய ஆணையை தருவார்கள் என்பதிலே 100 வீத நம்பிக்கை இருக்கின்றது . என்றார்.