யாழ்.மாநகரசபைக்கான தமது முதன்மை வேட்பாளர்களை அறிவித்த பிரதான தமிழ் கட்சிகள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கான தமது முதன்மை வேட்பாளர்களை அறிவித்த பிரதான தமிழ் கட்சிகள்..!

யாழ்.மாநகரசபை தமது முதல்வர் வேட்பாளர்கள் தொடர்பாக அறிவிப்பினை கட்சிகள் வெளியிட்டிருக்கின்றன. 

இதன்படி தமிழ்தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளராக குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். 

கூட்டமைப்பில் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) சார்பில் முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) சார்பில் முதல்வர் வேட்பாளராக எவரையும் நியமிக்கவில்லை எனவும் 

தேர்தலின் பின் தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள் சின்னம்) சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, ஆசிரியர் திலீபன் திலீசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு