SuperTopAds

பாடசாலை நடன குழுவை ஜேர்மனுக்கு அனுப்புவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய ஆசிரியை!

ஆசிரியர் - Editor I
பாடசாலை நடன குழுவை ஜேர்மனுக்கு அனுப்புவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய ஆசிரியை!

பாடசாலை நடனக் குழுவை ஜேர்மனுக்கு அனுப்புவதாக கூறி பெற்றோரிடம் பணம் வாங்கிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் நடனப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவரே கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆசிரியைக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தது தொடர்பாக நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், 

சுமார் 50 இலட்சம் ரூபா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

Radio