SuperTopAds

மாணவனின் முகத்தில் அதிபர் முத்தமிட்டதாக கூறும் மாணவனின் தாய் - இல்லை சிகரெட் புகைத்தானா என பரிசோதித்தேன் என கூறும் அதிபர்! விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
மாணவனின் முகத்தில் அதிபர் முத்தமிட்டதாக கூறும் மாணவனின் தாய் - இல்லை சிகரெட் புகைத்தானா என பரிசோதித்தேன் என கூறும் அதிபர்! விசாரணை ஆரம்பம்..

10ம் வகுப்பு மாணவனின் முகத்தில் அதிபர் முத்திமிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் கேகாலை - தெடிகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக மாணவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

இந்தச் சம்பவத்துக்கு முகம்கொடுத்ததாக கூறப்படும் மாணவனிடமும் அதிபரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவன் சிகரெட் புகைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிகரெட் வாசனை வருகிறதா என்பதை கண்டறியவே தான் அவ்வாறு செய்தேன் 

என குறித்த அதிபர் கூறியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது மாணவன் புகைபிடிக்கவில்லை என சோதனையில் தெரியவந்ததாகவும் 

இதனை விட வேறு எந்த நோக்கத்துக்காகவும் செய்யவில்லை எனவும் அதிபர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Radio