வாரிசு படக்குழு விடுத்த புதிய வசூல் அறிவிப்பு!! -வியப்பில் தளபதி ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
வாரிசு படக்குழு விடுத்த புதிய வசூல் அறிவிப்பு!! -வியப்பில் தளபதி ரசிகர்கள்-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு படம் கடந்த 11 ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 

வாரிசு படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதன்படி இப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு