தொடர்ச்சியாக இரண்டாவது சதம்!! -எதிரணியை அச்சுறுத்தும் சுப்மன் கில்-

ஆசிரியர் - Editor II
தொடர்ச்சியாக இரண்டாவது சதம்!! -எதிரணியை அச்சுறுத்தும் சுப்மன் கில்-

ஐதராபாத்தில் இன்று புதன்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். கில் தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய போதும், சிக்ஸர்களை விளாசவும் தவறவில்லை.

80 பந்துகளை சந்தித்த பின்னர் அதிரடி காட்டிய கில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3 ஆவது சதத்தினை எட்டினார். இலங்கைக்கு எதிராக சதம் விளாசியிருந்த கில் தொடர்ச்சியாக அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.

இதன்மூலம் அவர் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீரர் கில் ஆவார்.

முதல் இடத்தில் பஹர் ஜமான் (18) உள்ள நிலையில், இரண்டாவது இடத்தை கில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹாக்ஹுடன் பகிர்ந்து கொண்டார். சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு