15 கடைகளை உடைத்து திருடிய பொருட்களை கொண்டு தான் ஒரு கடை வைத்த ஆங்கில பாட ஆசிரியர் உட்பட இருவர் கைது!
15 கடைகளை உடைத்து திருடிய பொருட்களை வைத்து தான் ஒரு கடையை உருவாக்கிய ஆங்கில பாட ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, இந்த ஆங்கில ஆசிரியர் பண்டாரகம பிரதேசத்தில் திருட்டுப் பொருட்களை சேகரித்து கடையொன்றை நடத்தி வருவதாகவும் சந்தேகநபரின் அந்தக் கடையில்
அனைத்துப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் காணப்பட்டதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பால் மா, சீனி, பருப்பு, எரிவாயு சிலிண்டர்கள்
மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பிலான பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகத்தில் ஆங்கில ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.