5 நாட்களில் 150 கோடி வசூல்!! -வாரிசு படக்குழு அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
5 நாட்களில் 150 கோடி வசூல்!! -வாரிசு படக்குழு அறிவிப்பு-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான வாரிசு படம் கடந்த 11 ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 

இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'வாரிசு' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு