SuperTopAds

குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

ஆசிரியர் - Editor I
குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

குளித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒகவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வலஸ்முல்ல ஒலுரா பிரதேசத்தை சேர்ந்த திருமணமான சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சார்ஜன்ட் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 

பயிற்சி பெற்று வருவதாகவும், வார விடுமுறைக்காக கிராமத்துக்கு வந்திருந்தபோது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மூன்று மணியளவில் வலஸ்முல்ல கல்வல என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்த 

இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Radio