வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டு உரிமையாளரான 61 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலைசெய்த வேலைக்காரி! பொலிஸார் தீவிர விசாரணை..

வாக்குவாதம் முற்றியதில் தனது எஜமானியை கத்தியால் குத்திக் கொலை செய்த வீட்டு வேலைக்காரி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் வெல்லம்பிட்டிய - லாங்சியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே
சந்தேகநபர் அவரது எஜமானியை கத்தியால் குத்தியதாகவும், படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
கத்தியால் குத்திய சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




