மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட இளம்பெண்! பின்னணியை கண்டுபிடித்த பொலிஸார், கடற்படை சிப்பாய் பிரதான சந்தேகநபர்..

பெண் ஒருவரை கடத்திய சம்பவத்தில் கடற்படை சிப்பாய்க்கு தொடர்புள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை பிலியந்தலை பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
திருமணமான குறித்த கடற்படை உத்தியோகத்தர் கடத்தப்பட்ட பெண்ணுடன் தகாத உறவை பேணி வந்ததாகவும்,
ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த உறவு முறிந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெண்ணை கடத்துவதற்கு முன் குறித்த கடற்படை உத்தியோகத்தர் பல முறை மிரட்டியதாகவும் விசாரணை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




