SuperTopAds

பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் அவருடைய நண்பர் இனந்தொியாத கும்பலால் குத்திக் கொலை!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் அவருடைய நண்பர் இனந்தொியாத கும்பலால் குத்திக் கொலை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவருடைய நண்பரும் நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

கிரியுல்ல பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குருணாகல் ரத்கலை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் மகேஷ் என்பவரும் 

அவரது நண்பருமே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்ய கிரியுல்ல பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று 

தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Radio