சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை நுாதன முறையில் திருடிய கணவன், மனைவி கைது!
வாகனம் ஒன்றிலிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான ஜப்பான் - யென் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அக்குறணை பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
அக்குறணை 7 ஆம் மைல் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் வாகனம் ஒன்றை செலுத்தி வந்துள்ளார்.
அவரது மகன் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியவர். அவரது பணப்பை ஒன்று வாகனத்தில் காணப்பட்டுள்ளது.
வாகனத்தைச் செலுத்தியவர் தனது நண்பர் ஒருவரைக் கண்டு வாகனத்தை நிறுத்தி கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அவ்வேளை வாகனம் கொள்வனவு செய்யும் ஒருவர் அவ் வாகனத்தை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அங்குள்ள பணப்பையை கண்டு அதனை தந்திரமான முறையில் திருடியுள்ளார்.ப
ணத்தைப் பறி கொடுத்தவர் சி.சி.ரி.வி. யின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போது திருடியவர் இனம் காணப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை 125 000 ரூபாவுக்கு இலங்கைப் பணமாக மாற்றி
அதில் 120 000 ரூபாயை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.மேலும் மேற்கொண்ட சோதனையின்போது
திருடப்பட்ட பணத்தின் மற்றும் ஒரு பகுதியும் வீட்டில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது. பணத்தை திருடிய குற்றத்திற்காகக் கணவனும்,
திருட்டுப் பொருளை உடன் வைத்திருந்த குற்றத்திற்காக மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளவத்துகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.