SuperTopAds

பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களை சேர்த்துவிடுவதாக கூறி பல லட்சம் ரூபாயை சுருட்டிய 54 வயது பெண்! எமார்ந்த பலர் வைத்தியர்களும், பொறியியலாளர்களுமாம்..

ஆசிரியர் - Editor I
பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களை சேர்த்துவிடுவதாக கூறி பல லட்சம் ரூபாயை சுருட்டிய 54 வயது பெண்! எமார்ந்த பலர் வைத்தியர்களும், பொறியியலாளர்களுமாம்..

பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களை சேர்த்துவிடுவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி மோசடி செய்த 54 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண் யக்கல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தொிவித்துள்ளனர். இவர் கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களை சேர்த்துவிடுவதாக கூறி பணத்தை சுருட்டியுள்ளார். 

இவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்களில் பலர் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் எனவும், அவ்வாறானவர்களை இலக்கு வைத்து சந்தேக நபரான பெண் இந்த மோசடியில் ஈடுபட்டமையும் தெரியவந்துள்ளது. 

கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அத்துகோரளவின் மேற்பார்வையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் 

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.