பொலிஸார் போன்ற தோற்றத்தை எற்படுத்தி வீதியில் நின்ற இளைஞனை கடத்தி பணம், நகை ஆகியவற்றை பறித்த கும்பல்! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..
பொலிஸார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வீதியில் நின்ற 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று நகைகளை பறித்த பின்னர் இளைஞனை வீதியில் விட்டுச் சென்ற கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞன் நின்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பொலிஸார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி
இளைஞனை கடத்திச் சென்று அவன் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவனிடமிருந்த பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு இடைவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.