SuperTopAds

மனைவியை கொலை செய்த கணவன் 3வது மாடியிலிருந்து குதித்து காயம்! பொலிஸார் தீவிர விசாரணை...

ஆசிரியர் - Editor I
மனைவியை கொலை செய்த கணவன் 3வது மாடியிலிருந்து குதித்து காயம்! பொலிஸார் தீவிர விசாரணை...

மனைவியை கொலை செய்துவிட்ட 3வது மாடியில் இருந்து குதித்த கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பொரளை - சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio