கட்டுப்பாடற்ற வேகம்! யாழ்.சிறுப்பிட்டியில் விபத்துக்குள்ளான இ.போ.ச பேருந்து..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்! யாழ்.சிறுப்பிட்டியில் விபத்துக்குள்ளான இ.போ.ச பேருந்து..

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் திருத்தும் கராச் ஒன்றுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட பேருந்தே இன்று வெள்ளிக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்த்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், விபத்திற்கு உள்ளான பேருந்தும், கராச்சில் நின்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு