அர்ஜுன் தாஸுடன் காதலா!! -புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா லட்சுமி -

ஆசிரியர் - Editor II
அர்ஜுன் தாஸுடன் காதலா!! -புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா லட்சுமி -

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரம் நடித்து பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் 'இதய' குறியீடுடன் பகிர்ந்துள்ளார்.

இதற்கு இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பலரும் இது அடுத்த படத்திற்கான அறிவிப்பா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது நட்பா? இல்லை காதலா? என்று இரு தரப்பிலும் எந்த வித கருத்தும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு