நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் பற்றரிகளை திருடி இரும்பு வியாபாரிக்கு விற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் பற்றரிகளை திருடி விற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி சுற்றுலா நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் ஆட்டோ ஆகியவற்றின் பற்றரிகளை கழற்றி இரும்பு வியாபாரிக்கு விற்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின்போது கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெற்றரிகள் 4,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.