வாங்கிய போதைப் பொருளுக்கு பணம் கொடுக்காததால் இரு இளைஞர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸார்!

வாங்கிய போதைப் பொருளுக்கு பணம் கொடுக்காததால் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருக்கின்றனர்.
ரம்புக்கனை பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸார் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தோட்டம் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் கொல்லப்பட்ட இளைஞர்கள்
அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம். என பொலிஸார் தொிவித்துள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர்.




