SuperTopAds

புத்த‌ள‌ம் மாவ‌ட்ட‌ம் க‌ல்பிட்டி பிர‌தேச‌ ச‌பைக்காக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌ட்டுப்ப‌ண‌ம் செலுத்திய‌து.

ஆசிரியர் - Editor III
புத்த‌ள‌ம் மாவ‌ட்ட‌ம் க‌ல்பிட்டி பிர‌தேச‌ ச‌பைக்காக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌ட்டுப்ப‌ண‌ம் செலுத்திய‌து.

2023 உள்ளூராட்சி மன்ற தேர்த‌ல் புத்த‌ள‌ம் மாவ‌ட்ட‌ம் க‌ல்பிட்டி பிர‌தேச‌ ச‌பைக்காக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி   புத்த‌ள‌ம் தேர்த‌ல் தெரிவ‌த்தாட்சி அலுவ‌ல‌க‌த்தில் க‌ட்டுப்ப‌ண‌ம் செலுத்திய‌து.


கட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ரும் புத்த‌ள‌ம் மாவ‌ட்ட‌த்துக்கு பொறுப்பாள‌ருமான‌ ஸப்வான் ச‌ல்மான் த‌லைமான் மற்றும் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராஃபி உள்ளிட்டோர் இன்று(10) புத்த‌ள‌ம் தேர்த‌ல் தெரிவ‌த்தாட்சி அலுவ‌ல‌க‌த்திற்கு சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அத்துடன் புத்தளம் மாநகர சபை புத்தளம் பிரதேச சபை உட்பட ஏனைய சபைகளுக்கான கட்டு பணம் எதிர்வரும்  தினங்களில் செலுத்தப்படும் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாளருமான ஸப்வான் சல்மான் தெரிவித்தார்.

இதே வேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக   மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அம்பாறை  மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை  (9) க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை தேர்த‌லுக்காக‌   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி சார்பில்  மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌   செய‌லாள‌ர் முஜாஹித்இ த‌விசாள‌ர் முஹ‌ம்ம‌த் ர‌ஷாத் ஆகியோர்   கட்டுப்பணம் செலுத்தினர்.

இதன் போது  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிஸ்ரீலங்கா தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ செய‌லாள‌ர் முஜாஹித்இ த‌விசாள‌ர் முஹ‌ம்ம‌த் ர‌ஷாத் ஆகியோர்   இம்முறை தூய அரசியல் கலாச்சாரம் ஒன்றினை முன்னெடுத்து மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டனர்.


இதே வேளை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.