நான் அவசரப்படவில்லை, என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் கூறுவேன்! இரா.சம்மந்தன் அமைதியாக பதில்..

ஆசிரியர் - Editor I
நான் அவசரப்படவில்லை, என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் கூறுவேன்! இரா.சம்மந்தன் அமைதியாக பதில்..

உள்ளூராட்சி தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் எனது கருத்தை மிக விரைவில் தொிவிப்பேன் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். 

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையினர் தனிவழியில் செல்வதற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 

எடுக்கப்பட்ட இறுதி முடிவு என்னவென்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இரா.சம்மந்தன் மேற்கண்டவாறு தொிவித்திருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக முகங்கொடுக்கவேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கூறினர்.  

அதுதொடர்பில் பங்காளிக்கட்சிகளுடன் நாம் நீண்ட நேரம் ஆராய்ந்திருந்தோம். அதனால் ஏற்படுகின்ற சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தோம். 

இந்நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக அந்தந்தக் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு நான் அவசரப்படவில்லை. அதுகுறித்து விரைவில் 

உத்தியோக பூர்வமான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு