தமிழரசு கட்சி தலைவர் பதவியை பறிக்க உள்வீட்டு சதி..! தன் சகாக்களுக்கு ஆசனம் வழங்க கூட்டமைப்பை உடைத்த ஒருவர்...
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து ஆறுதலடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு ஆசைப்பட்டு அதனை பறிப்பதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களுக்குள் பேச்சு எழுந்திருக்கின்றது.
சகாக்களுக்கு ஆசனம் - கூட்டமைப்பை உடைக்க காரணம்..
உள்ளுராட்சி தேர்தலை தமிழ்தேசிய கூட்டமைப்பாக எதிர்கொண்டால் தனது சகாக்களுக்கு ஆசனம் வழங்க முடியாத சூழல் உருவாகும் என்பதால் முன்கூட்டியே சுதாகரித்துக் கொண்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
அதிக போனஸ் ஆசனங்களை பெறுவதற்காக பிரிந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்ற சூழ்ச்சி நிறைந்த கருத்தை முன்வைத்தார். அதற்காக அதிகளவான மத்திய குழு உறுப்பினர்களால் கலந்துகொள்ள முடியாத மட்டக்களப்பில்
மத்திய குழு கூட்டத்தை நடாத்தி அரைவாசிக்கும் சற்று அதிகமான மத்திய குழு உறுப்பனர்களுடன் தமிழரசு கட்சி தனித்து உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு ஆசை..
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை அண்மையில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நான் தலைவராக இருக்கிறேன். நீங்கள் செயலாளராக இருங்கள் என வெட்கத்தை விட்டு கேட்டுள்ளார்.
எனினும் செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுவது பாரம்பரியம் என மாவை பதிலளித்தபோது அப்படி எங்கும் எழுதப்பட்டுள்ளதா? என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுள்ளார்.
சகாக்களுக்கு ஆசனம் வழங்கும் திட்டம் நிறைவேறிய நிலையில், அடுத்தகட்டம் தலைவர் பதவிக்கு ஆசைப்படும் நிலை உருவாகியுள்ளது என்பது உள்வீட்டு தகவல்.
தனது சொல் கேட்காதவர்களுக்கு மத்திய குழுவில் இடமில்லை...
அண்மையில் மத்திய குழுவில் சேர்ப்பதற்காக 10 பேருடைய பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழரசு கட்சியின் நிகழ்கால பதில் செயலாளரான வடமாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்,
பட்டியலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் அதிதீவிர விசுவாசிகளான இரு சுகிர்தன்கள் தவிர்ந்த மற்றய 8 பேரை மத்திய குழுவுக்குள் உள்வாங்குவதை தடுப்பதற்கான அத்தனை காரியங்களையும் செய்து முடித்துள்ளார்.
அதுவும் மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு செலுத்தவேண்டிய நன்றிக்கடனுக்காகவே செய்யப்பட்டது. என கூறும் உள்வீட்டு தகவல்கள் மிக விரைவில் தமிழரசு கட்சி தலைவர் பதவி மாவையிடமிருந்து பறிக்கப்பட்டது.
என்ற தகவலும் வெளியாகும் எனவும் கூறியுள்ளது.