சபரிமலைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குவந்த பக்தரின் பையில் துப்பாக்கி ரவை! விமான நிலையத்தில் பரபரப்பு..
சபரிமலை யாத்திரைக்காக இந்தியா செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஒருவரின் பையிலிருந்து துப்பாக்கி ரவை மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் பொதி ஒன்றில் ரி-56 துப்பாக்கியின் தோட்டா காணப்பட்டதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் 47 வயதான ஹட்டனை வசிப்பிடமாக கொண்டவர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு விற்பனை நிலையம் ஒன்றில் இந்த இரும்புகளை சந்தேக நபர் கொள்வனவு செய்து
அவற்றை இந்தியாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவிருந்தமை தெரிய வந்துள்ளது. இதேவேளை, சந்தேக நபரின் இரும்புப் பொதிக்குள்ளேயே ரி- 56 தோட்டா கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.