நுளம்பு வலையில் ஓட்டைபோட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளை! பொலிஸ் சார்ஜன்ட் வீட்டில் துணிகரம்..

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்து நுளம்பு வலையில் ஓட்டைபோட்டு உறங்கிக் கொண்டிருந்த சார்ஜன்ட்டின் மனைவியின் தங்க சங்கிலியை திருடிய சம்பவம் மஹியங்கனை - ஹசலக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சார்ஜென்ட்டின் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகை திருடப்பட்டபோது பொலிஸ் சார்ஜன்ட் கடமைக்காக சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




