SuperTopAds

தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு! தொலைபேசியில் கேம் விளையாடுவதற்காக நடந்த மோதலில் விபரீதம்..

ஆசிரியர் - Editor I
தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு! தொலைபேசியில் கேம் விளையாடுவதற்காக நடந்த மோதலில் விபரீதம்..

தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

கையடக்க தொலைபேசி விளையாட்டில் சகோதரர்களுக்கிடையில் உருவான தர்க்கம் மோதலாக மாறியதில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

தருமபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Radio