வெளிநாட்டவர்கள் மூலம் ATM இயந்திரங்களை செயலிழக்க செய்து பணம் கொள்ளை! பொலிஸ் அதிகாரி ஒருவரும் சிக்கினார்..

வங்கிகளின் ATM இயந்திரங்களை செயலிழக்க செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மீகஹதென்னை பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பகுதி பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ, பத்தேகம, காலி, கராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச வங்கிகள் பலவற்றின் கணினியை ஊடுருவி பெருந்தொகையான பணத்தை வெளிநாட்டவர்கள் இருவர் திருடியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,
அவர்களை கைதுசெய்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளையடுத்தே மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.




